பெண்கள் ஆராதனை

Event Details

  • Friday | Jul 10, 2020 to Friday | Jul 10, 2020
  • 10:30 - 12:00

10 ஜூலை 2020, வெள்ளிக்கிழமை

சமீபத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதாலும், அரசாங்க உத்தரவுப்படி, சபையினர் தங்கள் வீடுகளில் குடும்பமாகவோ அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள குடும்பங்களுடன் இணைந்து குழுக்களாகவோ ஆராதிக்குமாறு உற்சாகப்படுத்துகிறோம். வரும் வெள்ளிக்கிழமை (10 ஜூலை 2020) புதுவாழ்வு ஏ.ஜி. சபையின் எந்த வளாகத்திலும் பெண்கள் ஆராதனைகள் நடைபெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், Facebook, YouTube@nlagchennai என்னும் சமூக வலைதளங்களிலும், www.nlag.in என்னும் நம் சபையின் இணையதள முகவரியிலும் தொடர்ந்து ஆராதனைகள் ஒளிபரப்பப்படும்.

இந்த நெருக்கடி நேரத்தை வெற்றிகரமாகக் கடந்து வரும்படி, சபையினர் தொடர்ந்து ஜெபித்து, நம் தேசத்திற்காகவும், உலகத்திற்காகவும் திறப்பில் நிற்குமாறு வலியுறுத்துகிறோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! இணையதளத்தில் சந்திப்போம்!